Categories
லைப் ஸ்டைல்

எவ்வளவு கிளீன் பண்ணுனாலும்…. உங்க சிங்க் ரொம்ப நாற்றம் அடிக்குதா…? இதை டிரை பண்ணி பாருங்க….!!!!

பெரும்பாலும் இல்லத்தரசிகளுக்கு சமையலறையை சுத்தமாக வைத்திருப்பது பெரும் சவாலாக உள்ளது. அதிலும் சிங்கை எப்படி சுத்தம் செய்வது என்பது பெரிய பிரச்சினை. ஏனெனில் பாத்திரங்களில் இருக்கும் அழுக்கு, எண்ணெய் பிசுக்குகள் இவற்றால் சிங்க் அழுக்கு படிந்து காணப்படும். எவ்வளவுதான் தேய்த்து தேய்த்து கழுவினாலும் அழுக்கை நீக்குவது மிகவும் கடினமாக இருக்கிறது. இதனை சுத்தம் செய்வதற்கு பல்வேறு கிருமிநாசினிகள் இருக்கிறது. இருப்பினும் வீட்டிலுள்ள பொருட்களை வைத்தும் சுத்தம் செய்யலாம். சிங்கை சரியாக சுத்தம் செய்யாவிட்டால் பாக்டீரியா வளர்ச்சி அதிகமாகி உடல் நல பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளது.

மேலும் சமையலறை மேடையையும் சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும். இப்போது சிங்கை எப்படி சுத்தப்படுத்தலாம் என்பது குறித்து பார்க்கலாம். பாத்திரம் கழுவும் சோப்பு, பேக்கிங் சோடா, மற்றும் டீகிரீசர் ஆகியவற்றை பயன்படுத்தி சுத்தம் செய்தால் சிங்க் புதிது போல் பளிச்சென்று மாறும். வாரம் ஒருமுறை இதை செய்யலாம். சிங்கில் உள்ள எண்ணெய் பசையை போக்க பாத்திர ம்  கழுவும் சோப், பாக்டீரியாக்களை அழிக்க பேக்கிங் சோடா மற்றும் சோப்புகள் ஆகியவை உதவுகிறது.

சிங்க் வடிகாலை  சுத்தம் செய்யும் போது சிறிய பிரஷ் வைத்து சுத்தம் செய்யலாம். சமையல் சோடா மற்றும் வெதுவெதுப்பான நீரை வடிகால் வழியாக ஊற்றினால் பூச்சி மற்றும் அழுக்குகளை வெளியேற்றலாம். சிங்கிள் செய்யக் கூடாத சில விஷயங்கள் உள்ளது. என்னவென்றால் சிங்கிள் அப்படியே காய்கறிகள் கொட்டுவதை தவிர்க்க வேண்டும். இது குழாய்களில் அடைப்பை ஏற்படுத்துவது மட்டுமின்றி நாற்றத்தையும் உண்டாக்கும்.

Categories

Tech |