சிவன் அருளால் முக்தி அடைந்த அடியார்கள் பல பேர் இருகிறார்கள். அவ்வாறு முக்தி அடைந்தவர்களில் ஒருவர் தான் பட்டினத்தார் என்று அழைக்கப்பட்ட திருவெண்காடர்.
முன்னோர் காலத்தில் காவேரிபூம்பட்டினத்தில் சிவநேசர், ஞானகமலாம்பிகை என்னும் சிவபக்த தம்பதியர் வாழ்ந்து வந்தனர். இவர்களுக்கு சிவன் அருளால் ஒரு மகன் பிறந்தார். அவருக்கு திருவென்கடர் என பெயர் இட்டு வளர்த்து வந்தனர். அவர் கடல் கடந்து வாணிபம் செய்தார். இவருக்கு சிவகலை என்பவருடன் திருமணம் ஆனது. குழந்தை பாக்கியம் இல்லாததால் சிவனை வணங்கி வந்தார் திருவெண்காடர்.
இவருக்கு அருள் செய்ய விரும்பிய சிவன், வறுமையில் வாடிய சிவபக்தராகிய சிவசருமர் சுசீலை தம்பதிக்கு மகனாக பிறந்தார். அவருக்கு மருதவாணர் என்று பெயர் இட்டனர். ஒருநாள் சிவசருமரின் கனவில் தோன்றிய சிவபெருமான் மருதவாணரை, திருவெண்காடருக்கு தத்து கொடுக்க சொன்னார். அது போலவே அவரும் செய்தார்.
மருதவாணர் திருவேங்கடரின் மகனாக இருந்து தந்தையின் வாணிப தொழிலை செய்தார். ஒரு நாள் வாணிபம் முடிந்து பெட்டியுடன் வந்து அன்னையிடம் கொடுத்தார். அதை திருவெண்காடர் திறந்து பார்த்த போது தவிட்டு உமிக்களால் செய்யப்பட்ட இரு மட்டும் இருந்தது. இதை பார்த்த அவர் கோவத்தில் வீசி எறிந்தார். அதில் “காதற்ற ஊசியும் வராது காண் கடைவழிக்கே” என்று எழுதியிருந்தது. மனிதன் எவ்வளவு சம்பாதித்தாலும் கடைசியில் காதில்லாத ஊசியை கூட எடுத்து செல்ல முடியாது என்பதை அவர் உணர்த்தார். இல்லற வாழ்க்கையை துறந்து தனக்கு முக்தி கொடுக்கும் படி சிவனை வேண்டினார். அவருக்கு கட்சி தந்து சிவன் தகுந்த காலத்தில் முக்தி கிடைக்கும் என்றார்.
அதன்படி அவர் திருத்தல யாத்திரை மேற்கொண்டார். சென்னை திருவெற்றியூரில் முக்தி பெற்றார். காவிரிபூம்பட்டினத்தில் பிறந்தார் என்பதால் பட்டினத்தார்” என்று அழைக்கபட்டார்.
இவர் பிறந்த ஊரான காவேரிபூம்பட்டினத்தில் பல்லவனேஸ்வரர் கோவில் உள்ளது. இங்கு மூலஸ்தானத்தில் சிவன் பெரிய லிங்கமாக கட்சி தருகிறார். பட்டினத்தாருக்கு தனி சன்னிதி சன்னிதி விமானத்தில் இவரது மனைவி, மகனாக வளர்ந்த சிவன் ஆகியோர் சிலைகள் உள்ளன.
அறிவான குழந்தை பிறக்கவும், பொருள் மீது ஆசை குறையவும் இங்கு வேண்டுகிறார்கள் இத்தலதிருக்கு அருகில் காவிரி, வங்காளவிரிகுடா கடலுடன் சங்கமிப்பதால் இவ்வடதிற்க்கு காவிரிபூம்பட்டினம் என்ற பெயர் வந்தது. பிற்காலத்தில் காவிரிபூம்பட்டினமானது இப்போது பூம்புகார் என்று அழைக்கபடுகிறது. பள்ளவனேஸ்வரர் கோவிலில் வழிபட பக்தர்கள் காலை 6.30 மணி முதல் 12 வரையிலும் மாலை 4.30 மணி முதல் இரவு 7.30 மணி வரை செல்லலாம்