Categories
அரசியல்

எவ்வளவு செய்யுறோம் தெரியுமா ? யாராக இருந்தாலும் வாங்க…. களத்தில பாருங்கள்….!!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு புள்ளி விவரங்களை வெளியீட்டு பேசிய சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாக்ஸர், இந்தியாவிலேயே 20,000 biovaccine கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அதில் 10,000 வீரியம் மிக்க தடுப்பு மருந்துகளை நம் தமிழ்நாட்டு அரசு பெற்றுள்ளது.பெரிய அரசு மருத்துவமனைகளுக்கு மட்டும் இல்லாமல் கடைக்கோடியில் இருக்கக்கூடிய அனைத்து அரசு மருத்துவமனைகளுக்கும் இந்த தடுப்பு மருந்தானது கிடைக்கப்பெற்றுள்ளது .

ஆண்டிபயாடிக் ,ரத்தம் உரைத்தலுக்கான தடுப்பு மருந்து,உயிர் காக்கும் தடுப்பு மருந்துகள் ஆகியவற்றை நமது முதலமைச்சர் அவர்கள் அனைத்து மருத்துவமனைகளிலும் இருப்பதை உறுதி செய்ய ஆணைகள் பிறப்பித்துள்ளார்.  கொரோனா [பேரிடர்களுக்கு தேவையான அனைத்து உபகரணங்களை வழங்க தேவையான நிதியை வழங்கக்கோரி நிதித்துறைக்கு ஆணையிட்டுள்ளார். இதனால் பிற மாநிலங்கள் மற்றும் நாடுகளை விட நம் முன்னிலையில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறோம் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.

பொதுமக்களுக்கு முதலமைச்சர் மற்றும் அரசு சார்பாக நான் சொல்ல விரும்புவது யாருக்கும் பதட்டம் வேண்டாம், பயம் வேண்டாம் நேர்மறை எண்ணங்களுடன் தைரியமாக இருக்க வேண்டும். உங்களை காக்க அரசு மற்றும்  செவிலியர்கள் உள்ளனர் இதனால் பயமோ பீதியோ வேண்டாம். வீட்டில் இருக்கும் நபர்கள் பாதுகாப்புடனும் மிகுந்த எச்சரிக்கையாகவும் இருக்க வேண்டும். மேலும் அரசாங்க விதிகளை மதித்து முகக்கவசம் அணிந்து ,வெளியில் வந்தால் சமூக இடைவெளியை எந்தவொரு அலட்சியமும் இல்லாமல் பின்பற்றவேண்டும்  என்பதை அன்போடு தெரிவித்து கொள்கிறேன்.

மக்களாகிய உங்களை காக்க நாங்கள் கூடுதலாக 14,814 மருத்துவர்கள், செவிலியர்கள், போன்றோரை பணிநியமித்தம் செய்துள்ளோம். செவிலியர்கள்,மல்டி பர்போஸ் ஒர்கேர் ஆகியோரை பணிநியமனம் செய்து கொண்டிருக்கிறோம். சித்த மருத்துவர்களிடம் இருந்து கபசுர குடிநீர் மற்றும் மருந்துகளை பெற்று கூடுதலாக அவற்றை விநியோகம் செய்து  வருகின்றோம்.  பிளாஸ்மா தெரபி இப்போது நல்ல நிலையில் சென்று கொண்டிருக்கிறது. இதை தொடர்ந்து பல்வேறு ஆராய்ச்சியில் நமது அரசின் வேண்டுகோளுக்கு ஏற்ப மருத்துவர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இதுமட்டும் இல்லாமல் இந்தியாவிலேயே இறப்பு விகிதத்தை கணக்கிடுகையில் நமது நாட்டில் இறப்பு விகிதம் குறைவாகவே உள்ளது. மேலும் இறப்பு விகிதத்தை குறைக்க நமது அரசு திட்டமிட்டு ஒருங்கிணைந்த மருத்துவ செய்முறைகளை செயல்படுத்தி தனியார் மருத்துவமனைகளுக்கும் நமது மருத்துவ அறிவுறுத்தி தெளிவுபடுத்துகிறோம். இதன்மூலம் தனியார் மருத்துவமனைகள் முழு பங்களிப்பை கொடுத்துள்ளனர்.

ஒவ்வொரு மருத்துவமணிகளிலும் எவ்வளவு படுக்கை வசதி உள்ளது என்பதை நமது website-ல்  பார்க்க கூடிய அந்த வசதியும் செய்யப்பட்டுள்ளது. இறுதியாக அரசு கொரோனா தடுப்பு நடவடிக்கைகளையும் தேவையான தடுப்பு மருந்துகளை வாங்கி உபயோக படுத்தவும் தயாராக உள்ளது.  களத்தில் பணிசெய்யும் பணியாளர்களை பாதுகாத்து அவர்களை உற்சாகப்படுத்தி தேவையான பாதுகாப்பு நடைமுறைகளை மேற்கொண்டு நமது  அரசு எவ்வாறு செயல்பட்டு கொண்டிருக்கிறது என்று யாராக இருந்தாலும் களத்தில் வந்து பாருங்கள். அரசு மக்களுக்கு தேவையான எல்லா ஏற்பாடுகளையும் செய்து தருவதை கடமையாக கொண்டு செயல்படும் எனவே பொதுமக்கள் யாரும் பயம் இல்லாமல் அரசின் விதிகளை கடைபிடித்து பாதுகாப்பாக இருக்கவும் அன்போடு கேட்டு கொள்கிறேன்.

Categories

Tech |