Categories
தேனி மாவட்ட செய்திகள்

எவ்வளவு சொன்னாலும் கேட்பதில்லை…. பறக்கும் படையினரிடம் சிக்கிய தேங்காய் வியாபாரி…. சூடு பிடிக்கும் தேர்தல் களம்….!

தேனியில் தேங்காய் வியாபாரியிடம் உரிய ஆவணங்களின்றி இருந்த 1,40,000 ரூபாயை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.

தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறவிருக்கிறது. இதனால் தேர்தல் குழு பணம் பட்டுவாடா போன்ற சட்டத்திற்குப் புறம்பான செயல்கள் நடைபெறாமலிருக்க அனைத்துப் பகுதிகளிலும் பறக்கும் படையினரை நியமித்தது. அதனால் அவர்கள் ஆங்காங்கே தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே பறக்கும் படையின் அதிகாரியான முத்துராமன் தலைமையில் காவல்துறையினர்கள் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது அவ்வழியாக மதுரை மாவட்ட தேங்காய் வியாபாரி முத்துப்பாண்டி என்பவர் சரக்கு வேனில் வந்துள்ளார். இந்நிலையில் அவரது வேனை மறித்த காவல்துறையினர் அதில் சோதனை செய்தனர். அப்போது அவ்வேனில் உரிய ஆவணங்களின்றி 1,40,000 ரூபாயை அவர் எடுத்து செல்வது கண்டறியப்பட்டது. இதனால் காவல்துறையினர் முத்துப்பாண்டியிடமிருந்த 1,40,000 ரூபாயை பறிமுதல் செய்தனர்.

Categories

Tech |