Categories
தேனி மாவட்ட செய்திகள்

எவ்வளவு சொன்னாலும் கேட்பதில்லை…. வசமாக சிக்கிய தி.மு.க பிரமுகர்…. பறக்கும் படையினர் அதிரடி….!!

தேனியில் பறக்கும் படையினர் காரில் வந்தவரிடம் 7,25,500 ரூபாயை பறிமுதல் செய்தனர்.

தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறவிருக்கிறது. இதனால் தேர்தல் குழு அனைத்து பகுதிகளிலும் பணம் பட்டுவாடா போன்ற சட்டத்திற்கு புறம்பான செயல்கள் நடைபெறாமலிருக்க பறக்கும் படையினரை நியமித்தது. இவர்கள் ஆங்காங்கே தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் தேனி மாவட்டம் போடியில் பறக்கும் படையில் அதிகாரியான முருகேசன் தலைமையிலான காவல்துறையினர் தீவிர வாகன தணிக்கை ஈடுபட்டனர்.

அப்போது அவ்வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த தி.மு.க பிரமுகரான பாலு என்பவரை பறக்கும் படையினர் மறித்து சோதனை செய்தனர். அதில் அவர் உரிய ஆவணங்களின்றி 7,25,500 ரூபாயை கொண்டு வந்தது கண்டறியப்பட்டது. இதனையடுத்து பறக்கும் படையினர் அவரிடமிருந்த பணத்தினை பறிமுதல் செய்து போடி கருவூலத்தில் ஒப்படைத்தனர்.

Categories

Tech |