நெல்லையில் சட்டத்திற்குப் புறம்பான செயல்களில் ஈடுபட்டு வந்த 2 பேரை காவல்துறையினர் குண்டர் சட்டத்தில் கைது செய்தனர்.
தற்போது உள்ள காலகட்டத்தில் அனைத்து பகுதிகளிலும் கொலை, கொள்ளை உட்பட பல்வேறு சட்டத்திற்குப் புறம்பான செயல்கள் சில நபர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இதனை தடுக்க காவல்துறையினர் பல முயற்சிகளை எடுத்து வருகிறார்கள். இந்நிலையில் திருநெல்வேலி மாவட்டம் தச்சநல்லூரில் வசித்து வரும் மணிகண்டன் என்பவரும், வண்ணார் பேட்டையை சேர்ந்த சுடலைமுத்து என்பவரும் சேர்ந்து அப்பகுதியில் கொலை, வழிப்பறி போன்ற சட்டத்திற்கு புறம்பான செயல்களில் ஈடுபட்டு வந்தனர்.
இதனை தடுக்கும் பொருட்டு நெல்லை மாவட்ட கமிஷனரான அன்பு, அவர்கள் இருவரையும் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய உத்தரவிட்டார். இவரின் உத்தரவின்படி காவல்துறையினர் அவர்கள் இருவரையும் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்து பாளையங்கோட்டை சிறையில் அடைத்தனர்.