Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

எவ்வளவு சொல்லியும் திருந்தல…. பொதுமக்களை அச்சுறுத்திய நபர்…. குண்டர் சட்டத்தில் கைது….!!

நெல்லையில் சட்டத்திற்குப் புறம்பாக செயல்பட்ட வாலிபரை காவல்துறையினர் குண்டர் சட்டத்தில் கைது செய்தனர்.

தற்போது உள்ள காலகட்டத்தில் அனைத்து பகுதிகளிலும் கொலை, கொள்ளை போன்ற செயல்கள் பெருகிக்கொண்டே வருகிறது . இதனைத் தடுக்க காவல்துறையினர் பல முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இருப்பினும் சில இடங்களில் இவ்வாறான செயல்கள் நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கிறது . அந்த வகையில் திருநெல்வேலியில் ரங்கநாதபுரத்தில் வசித்து வரும் மாரி என்பவர் சட்டத்திற்குப் புறம்பான செயல்களில் ஈடுபட்டு வந்தார்.

அதாவது கொலை செய்வது போன்ற மக்களை அச்சுறுத்தும் செயல்களில் ஈடுபட்டுள்ளார் . இதனால் நெல்லை மாவட்ட போலீஸ் கமிஷனர் அன்பு மாரியை குண்டர் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார். அதன்பேரில் டவுன் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ராமேஸ்வரி. மாரியை நேற்று குண்டர் சட்டத்தில் கைது செய்து பாளையங்கோட்டையிலுள்ள மத்திய சிறையில் அடைத்தனர் .

Categories

Tech |