கடலில் மீன் பிடித்து கொண்டிருக்கும் போது மீனவர் ஒருவர் தவறி விழுந்து கடலில் மாயமான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தை அடுத்துள்ள தனுஷ்கோடி பகுதியில் இருந்து 12 மீனவர்கள் நாட்டுப்படகில் மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர். இந்நிலையில் அவர்கள் நடுக்கடலில் மீன் பிடித்து கொண்டிருந்தபோது மீனவர் முனியராஜ் திடீரென படகில் இருந்து தவறி கீழே விழுந்துள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த மற்ற மீனவர்கள் உடனடியாக கடலில் குதித்து அவரை தேடியுள்ளனர்.
ஆனால் வெகு நேரம் தேடியும் முனியராஜை கண்டுபிடிக்க முடியவில்லை. இதுகுறித்து மீனவர்கள் உடனடியாக கரைக்கு திரும்பி ராமேஸ்வரம் கடலோர போலீசிடம் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் அடிப்படையில் போலீசார் உடனடியாக மீனவரை தேட நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.