கொரோனா விதி மீறலில் ஈடுபட்டால் சாதாரண நபரோ அல்லது பெரிய தலைவரோ அனைவருக்கும் சம அளவில் தான் தண்டனை கிடைக்கும் என கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார்.
கர்நாடகாவில் 12 ஆயிரம் கொரோனா பாதிப்புகள் நேற்று பதிவு செய்யப்பட்டன. இந்தியாவில் கொரோனா பாதிப்பில் 3வது இடத்தில் கர்நாடகா உள்ளது. அதனால், அதிக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தேவையாக உள்ளன என முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை தெரிவித்து உள்ளார்.தொடர்ந்து அவர் கூறும்போது, கொரோனா விதிமீறலில் ஈடுபட்டால் சாதாரண நபரோ அல்லது பெரிய தலைவரோ எந்த வேற்றுமையும் கிடையாது.
சட்டப்படி சம அளவில் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடும் வகையில் தெரிவித்துள்ளார். மேகதாது அணை விவகாரத்தில் பாதயாத்திரை மேற்கொண்ட காங்கிரஸ் கட்சிக்காரர்கள் 30 பேர் மீது எப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்ட நிலையில், பொம்மை இதனை தெரிவித்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.