முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் செய்தியாளர்களை சந்தித்து பேசியுள்ளார்.
தற்போது தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி பெய்து வருகிறது. இதனால் சென்னையில் ஏற்படும் வெள்ள நீரை வெளியேற்றும் வகையில் மழை நீர் வடிகால் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதனை நேற்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று ஆய்வு செய்தார். இதனையடுத்து நீர்நிலை பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு கொசுவலைகளை வழங்கினார்.
இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது. எவ்வளவு பெரிய மழை வந்தாலும் சரி அதை தமிழக அரசும், சென்னை மாநகராட்சியும் எதிர்கொள்ள தயாராக இருக்கிறது. மேலும் மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள சீர்காழியில் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்பை நான் நேரில் சென்று ஆய்வு செய்ய உள்ளேன் என அவர் கூறியுள்ளார்.