வீடுகளில் பயன்படுத்தும் மின்சாரத்தின் அளவை கணக்கிட செல்போன் செயலியை தமிழ்நாடு மின்சார வாரியம் அறிமுகப்படுத்தி இருக்கிறது. அதுமட்டுமல்லாமல் செல்போன் செயலியில் மின்சாரப் பயன்பாட்டை பதிவு செய்ததும், செலுத்த வேண்டிய கட்டணம் குறுஞ்செய்தியாக அனுப்பப்படும். இதுவரையிலும் 27 பகுதிகளில் பரிசோதனை செய்யப்பட்ட இந்த செயலி சரியாக செயல்படுவதால் சென்னை மற்றும் வேலூரில் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சியில் இருக்கின்றனர். டேன்ஜெட்கோ முற்றிலும் கணினிமயமாக்கப்பட்டு வருவதன் ஒரு பகுதிதான் இந்த செயலி ஆகும்.
Categories