தேனி மாவட்டத்தில் கம்பம் பகுதியில் விஜய் ஆனந்த் என்ற விவசாயி வசித்து வந்தார். இவர் கடந்த சில மாதங்களாக மூச்சுத் திணறலால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதனை குணப்படுத்துவதற்கு அவர் பல்வேறு மருத்துவமனைகளை நாடி உள்ளார். ஆனால் எந்த சிகிச்சைக்கும் நோய் கட்டுப்படவில்லை. இதனால் விஜய் ஆனந்த் மிகுந்த மன உளைச்சலில் இருந்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் விஜய் ஆனந்தும் அவரது தாயும் உணவு அருந்திவிட்டு தூங்கச் சென்றுள்ளனர்.
அதன் பின் நள்ளிரவில் விஜய் ஆனந்தின் தாய் எழுந்து வந்துள்ளார். அப்போது விஜய் ஆனந்த் ஊஞ்சல் சங்கிலியில் தூக்கில் பிணமாக தொங்கியுள்ளார். இதனை கண்டதும் அவர் அதிர்ச்சி அடைந்து போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளார். இந்த தகவலும் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விஜய் ஆனந்தின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விஜய் ஆனந்தின் இறப்பு குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.