Categories
மாநில செய்திகள்

எவ்வித அச்சமும் இல்லாமல் நேர்மையாக செயல்படுவேன்…. புதிய தலைமை நீதிபதி அதிரடி பேச்சு….!!!!

சென்னை உயர்நீதிமன்றத்தில் தலைமை நீதிபதியாக இருந்த சஞ்சிப் பானர்ஜி மேகாலயா ஐகோட்டிற்கு மாற்றப்பட்டார். இதையடுத்து இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் புதிய பொறுப்பு தலைமை நீதிபதியாக முனீஸ்வர நாத் பண்டாரி சென்னை கவர்னர் மாளிகையில் பொறுப்பேற்றார். அந்த விழாவில் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி புதிய பொறுப்பு தலைமை நீதிபதியாக முனீஸ்வரருக்கு பதவி பிரமாணம் செய்துவைத்தார்.

இந்த விழாவில் பேசிய தலைமை நீதிபதி பண்டாரி, பணியில் எந்தவித பயமும், பாரபட்சமும் இல்லாமல் நேர்மையாக செயல்படுவேன் என்று உறுதியளிக்கிறேன். மேலும் இங்கு நிறைய பேச விரும்பவில்லை. ஆனால் அதை செயலில் காட்டுவேன். தற்போது வணக்கம், நன்றி போன்ற வார்த்தைகள் கற்றுள்ளேன். நேற்று முதல் தமிழ் கற்க தொடங்கியுள்ளேன்.

வரும் நாட்களில் தமிழில் பேச முயற்சி செய்வேன். தினந்தோறும் சில வார்த்தைகளை கற்றுக்கொடுங்கள். மேலும் தமிழகத்தில் பிறப்பதற்கு கனவு கண்டேன். ஆனால் இங்கு பணியாற்றுவதன் மூலம் அந்த கனவு நனவாகியுள்ளது என்று அவர் கூறியுள்ளார்.

Categories

Tech |