இங்கிலாந்தில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களில் சுமார் 86 சதவீதம் பேருக்கு எவ்வித அறிகுறியும் ஏற்படுத்தவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது.
இந்த யுனிவர்சிட்டி காலேஜ் ஆப் லண்டன் என்ற கல்வி நிறுவனத்தை சேர்ந்த ஆய்வாளர்கள் நடத்திய ஆய்வில் கொரோனா வைரஸ் எவ்வித அறிகுறியும் இன்றி பரவி வருவது தெரிய வந்துள்ளது. இங்கிலாந்தில் ஊரடங்கு அமலில் இருந்த போதும் 36 ஆயிரத்து 61 பெயர் இடம் கொரோனா பரிசோதனை நடைபெற்றது. இதில் 115 பேருக்கு தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. அவர்களில் 14 சதவீதம் பேருக்கு மட்டுமே கொரோனா அறிகுறிகள் தென்பட்டன. மீதமுள்ள 86 சதம் பேருக்கு எவ்வித அறிகுறியும் ஏற்படவில்லை என்பது ஆய்வில் தெரியவந்துள்ளது.