Categories
சினிமா

எஸ்கே-20… “சிவகார்த்திகேயனின் கதாப்பாத்திரம் என்ன தெரியுமா..?” வெளியான சூப்பர் அப்டேட்…!!!

எஸ்கே-20 திரைப்படத்தில் சிவகார்த்திகேயனின் கதாபாத்திரம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக வலம் வரும் சிவகார்த்திகேயனுக்கு இடையில் சில படங்கள் தோல்வி கண்டதால், உத்வேகத்துடன் செயல்பட்டதால் டாக்டர் திரைப்படமானது இவருக்கு நல்ல வரவேற்ப தந்தது. இந்நிலையில் சிவகார்த்திகேயன் தனது 20-வது திரைப்படத்தில் நடித்து வருகின்றார்.

இத்திரைப்படமானது தமிழ்,தெலுங்கு என இரண்டிலும் உருவாவதால் சிவகார்த்திகேயன் இத்திரைப்படம் மூலம் தெலுங்கு திரையுலகில் நேரடியாக அறிமுகமாகிறார். படத்தின் அப்டேட்கள் அவ்வபோது வெளியாகிக் கொண்டிருக்கும் நிலையில் தற்போது இந்த படத்தில் சிவகார்த்திகேயனின் வேடம் குறித்த செய்தி வெளிவந்திருக்கின்றது. இந்தப் படத்தில் சிவகார்த்திகேயன் ஆசிரியராக நடிப்பதாகவும் வெளிவந்துள்ளது. கதாநாயகியான மரியா ஆங்கில ஆசிரியராக நடிப்பது குறிப்பிடத்தக்கது..

Categories

Tech |