ராஜஸ்தான் மாநிலம் கரோலியின் இருக்கும் எஸ்பிஐ கிளையிலிருந்து 11 கோடி ரூபாய் நாணயங்கள் காணாமல் போன வழக்கில் சிபிஐ விசாரணை தொடங்கியுள்ளது. இது தொடர்பாக வங்கியின் முன்னாள் ஊழியர்கள் 15 பேரின் வீடுகளில் சோதனை செய்யப்பட்டு வருகின்றது. ஆகஸ்ட் 2021ல், கணக்குகளில் சந்தேகத்தை ஏற்படுத்தியது. இதை தொடர்ந்து, பணத்தை எண்ண வங்கி முடிவு செய்ததும், நாணயங்கள் மாயமானது தெரியவந்தது.
புள்ளி விவரங்களின்படி வங்கியின் இருப்பில் 13 கோடி ரூபாய் நாணயங்கள் இருந்தது. ஆனால் 3000 பைகளில் பாதுகாக்கப்பட்டிருந்த, இரண்டு கோடி நாணயங்கள் மட்டுமே கிடைத்தன. மீதியுள்ள 11 கோடி நாணயங்களும் திருடப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. நாணயங்களை எண்ணும் தனியார் நிர்வாகிகளை வங்கி ஊழியர்கள் மிரட்டியதாகவும் கூறப்படுகிறது. தொடர்ந்து, எஸ்பிஐ ராஜஸ்தான் உயர் நீதிமன்றத்தை அணுகியது குறிப்பிடத்தக்கது.