எஸ்பிஐ கிரெடிட் கார்டு வைத்திருப்பவர்கள் வீட்டு பராமரிப்பு பொருட்கள், சோனி தயாரிப்புகள், மருந்துகள் மற்றும் இரு சக்கர வாகனங்கள் போன்றவற்றில் சிறந்த சலுகைகளைப் பெற முடியும். நீங்கள் எஸ்பிஐ கிரெடிட் கார்ட் கொண்டு சோனி தயாரிப்புகளை வாங்கினால், உங்களுக்கு 5% கேஷ்பேக் கிடைக்கும். இதில், குறைந்தபட்ச பரிவர்த்தனை 50 ஆயிரம் ரூபாயாக இருக்க வேண்டும். அதிகபட்சமாக ரூ .4000 கேஷ்பேக் கிடைக்கும். இந்த சலுகை 2021 ஜூலை 31 வரை செல்லுபடியாகும்.
உங்களிடம் எஸ்பிஐ கிரெடிட் கார்டு இருந்தால், homecentre.in இல் நீங்கள் செய்யும் ஷாப்பிங்கில் 5% கேஷ்பேக் பெறலாம். இதற்கு குறைந்தபட்ச பரிவர்த்தனை ரூ .5000 ஆக இருக்க வேண்டும். அதிகபட்சமாக ரூ 1000 கேஷ்பேக் கிடைக்கும். இந்த சலுகை 2021 ஆகஸ்ட் 15 வரை செல்லுபடியாகும். எஸ்பிஐ அட்டை வைத்திருப்பவர்கள் Dhani Pharmacy-யிலிருந்து வாங்கினால் 27 சதவீதம் வரை உடனடி தள்ளுபடி கிடைக்கும். இந்த சலுகையின் பயனை 5 செப்டம்பர் 2021 வரை பெறலாம் .
நீங்கள் சூப்பர்டெய்லி மொபைல் செயலி மூலம் ஷாப்பிங் செய்தால், உங்களுக்கு 5% கேஷ்பேக் கிடைக்கும். இந்த சலுகை எஸ்பிஐ அட்டை வைத்திருப்பவர்களுக்கு 27 செப்டம்பர் 2021 வரை கிடைக்கும். இதில், குறைந்தபட்ச பரிவர்த்தனை ரூ .2000 ஆக இருக்க வேண்டும். இதில், அதிகபட்சமாக ரூ .200 கேஷ்பேக் கிடைக்கும். ஹோண்டா இரு சக்கர வாகனங்களை வாங்குவதிலுமம் சிறந்த சலுகைகள் கிடைக்கின்றன. நீங்கள் எஸ்பிஐ கிரெடிட் கார்டு கொண்டு ஈஎம்ஐ பரிவர்த்தனையில் ஹோண்டா 2 சக்கர வாகனங்களை வாங்கினால், உங்களுக்கு 5 சதவீதம் கேஷ்பேக் கிடைக்கும். குறைந்தபட்ச பரிவர்த்தனை ரூ .40000 ஆக இருக்க வேண்டும். அதிகபட்சமாக ரூ .3500 வரை தள்ளுபடி கிடைக்கும். இந்த சலுகை 2021 ஆகஸ்ட் 31 வரை செல்லுபடியாகும்.