Categories
தேசிய செய்திகள்

எஸ்பிஐ செயலி வாயிலாக ஃபாஸ்டேக் ரீசார்ஜ்…. எப்படி செய்வது தெரியுமா?…. இதோ முழு விபரம்….!!!!

நாடு முழுதும் உள்ள டோல் பிளாசாக்களில் பாஸ்டேக் வாயிலாக கட்டணம் செலுத்தும் முறையானது அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன் வாயிலாக வாகன ஓட்டுநர்கள் நேரடியாக ஃபாஸ்டேக் ப்ரீபெய்டு கணக்குகளிலுள்ள தொகையிலிருந்து நேரடியாக டோல்கள் கட்டணங்களை எளிமையாக செலுத்தி விட்டு போகலாம். தற்போது எஸ்பிஐ யோனோஆப் வாயிலாக ஃபாஸ்டேக் ரீசார்ஜ் செய்வது எப்படி என்று இங்கே தெரிந்துகொள்வோம்.

# உங்களது மொபைலில் YONO செயலியை திறக்க வேண்டும்.

# தற்போது உங்களது அக்கவுண்ட் நம்பர், பாஸ்வேர்டு பயன்படுத்தி கணக்கில் உள்நுழைய வேண்டும்.

# YONO Pay என்பதனை தேர்ந்தெடுக்க வேண்டும்.

# அதன்பின் கீழே ஸ்க்ரோல் செய்து Quick Payments என்பதன் கீழ் இருக்கும் ஃபாஸ்டேக்-ஐ கிளிக் செய்ய வேண்டும்.

# UPI வாயிலாக ஃபாஸ்டேக் -ஐ ரீசார்ஜ் செய்வதற்கான ஆப்சன் அங்கே இருக்கும்.

# அதை தேர்வு செய்து நொடியில் பாஸ்டேக் கணக்கை ரீச்சார்ஜ் செய்யவேண்டும்.

Categories

Tech |