Categories
தேசிய செய்திகள்

எஸ்பிஐ வங்கி வாடிக்கையாளர்களுக்கு…. வெளியான மிக முக்கிய அறிவிப்பு…..!!!!

இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா தனது வாடிக்கையாளர்களுக்கு எச்சரிக்கை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இது குறித்து வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், கேஒய்சி மோசடி நாடு முழுவதும் அதிக அளவு பரவியுள்ளது. வங்கி வாடிக்கையாளர்களுக்கு தங்கள் கேஒய்சி- ஐ அப்டேட் செய்யுமாறு எஸ்எம்எஸ் வழியே லிங்க் அனுப்பப்படும்.

அது போன்ற செய்திகள் அனைத்தும் போலியானவை. அதேபோல, மொபைல் கால் மற்றும் எஸ்.எம்.எஸ். மூலமாக வரும் தகவல்களை வைத்து மொபைல் ஆப் எதையும் பதிவிறக்கம் செய்ய வேண்டாம் எனவும் ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா வங்கி கேட்டுக் கொண்டுள்ளது. அப்படி ஒரு SMS வந்தால் உடனே சைபர் கிரைமில் cybercrime.gov.in என்ற இணையதளத்தில் புகார் அளிக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளது.

Categories

Tech |