Categories
தேசிய செய்திகள்

எஸ்பிஐ வங்கி வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு…. வெளியான எச்சரிக்கை அறிவிப்பு…..!!!!

அண்மையில் ஸ்டேட் பேங்க்ஆப் இந்தியா (SBI) வங்கியின் வாடிக்கையாளர்கள் பல பேர் தங்களது கணக்குகள் முடக்கப்பட்டு உள்ளதாக டுவிட்டர் மூலம் புகார் தெரிவித்து வருகின்றனர். காரணம் வங்கி நிர்வாகத்தின் அறிவுறுத்தலின்படி KYC விதிமுறைகளுக்கு இணங்காத பல்வேறு வாடிக்கையாளர்களின் கணக்குகளை எஸ்பிஐ முடக்கியுள்ளது. இதையடுத்து எழுப்பப்பட்ட புகார்களுக்கு பதில் அளித்த எஸ்.பி.ஐ நிர்வாகம் ஆர்பிஐ ஆணையின்படி வாடிக்கையாளர்கள் தங்களது கேஒய்சியை அவ்வப்போது புதுப்பிக்க வேண்டும்.

ஆகவே KYC அப்டேட் நிலுவையிலுள்ள வாடிக்கையாளர்களுக்கு SMS போன்ற பல்வேறு சேனல்கள் வாயிலாக எச்சரிப்புகள் கொடுக்கப்பட்டது. இந்த அறிவிப்பின்படி இதுவரையிலும் KYC அப்டேட் மேற்கொள்ளாத வாடிக்கையாளர்களின் வங்கி கணக்குகளை நிர்வாகம் முடக்கி இருக்கிறது. தற்போது பயனர்கள் ஏதேனும் ஒரு கிளைக்கு சென்று அவர்களின் KYC விபரங்களை புதுப்பிக்கலாம் (அல்லது) அவர்களின் KYC ஆவணங்களுக்கான நகலை உங்கள் பதிவு செய்யப்பட்ட அஞ்சல் ஐடி வாயிலாக கிளை மின்னஞ்சல் ஐடிக்கு அனுப்பலாம் என குறிப்பிட்டுள்ளது.

அதனடிப்படையில் எஸ்.பி.ஐ வாடிக்கையாளர்கள் தங்களது கேஒய்சி விபரங்களை புதுப்பிப்பதற்கு அடையாளம் மற்றும் முகவரிசான்றிதழின் நகலை மின்அஞ்சலின் வாயிலாக தங்களது வங்கிக் கிளைக்கு அனுப்பி செயல்முறையினை முடித்துவிடலாம். மறு பக்கத்தில் ஆன்லைன் வழியாக தேர்வு செய்தால், தேவையான ஆவணங்களையும் பதிவு செய்யப்பட்ட மின்னஞ்சல் முகவரியில் இருந்து கிளையின் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும். தற்போது SBI இணையதளத்தின் அடிப்படையில் KYC-ஐ புதுப்பிப்பதற்கான அடையாள (அல்லது) முகவரிச்சான்றாக ஏற்றுக்கொள்ளப்படும் ஆவணங்கள் கீழே விரிவாக கொடுக்கப்பட்டுள்ளது. அந்த வகையில், தனிநபர்களுக்கு

# கடவுச்சீட்டு

# வாக்காளர் அடையாளஅட்டை

# ஓட்டுனர் உரிமம்

# ஆதார் கடிதம்/அட்டை

# NREGA அட்டை

# பான்கார்டு

# அடையாளச் சான்று மற்றும் முகவரிக்கான சான்று குறித்த ஏதேனும் ஒரு ஆவணம்.

சிறு கணக்குகளுக்கு

# வாக்காளர் அடையாள அட்டை

# ஓட்டுனர் உரிமம்

# ஆதார் அட்டை

# NREGA அட்டை

# பான்கார்டு

# அடையாளச்சான்று மற்றும் முகவரிக்கான சான்று குறித்த ஏதேனும் ஒரு ஆவணம்.

குழந்தைகளை பொறுத்தவரையிலும் 10 வயதுக்கு உட்பட்டவராக இருந்தால், கணக்கை நிர்வகிக்கும் நபருக்கான அடையாள ஆவணங்கள் வழங்கப்பட வேண்டும். ஒரு மைனர் தன் கணக்கை தன்னிச்சையாக நிர்வகிக்கும்போது, ஒரு தனி நபரின் முகவரியை கண்டறிந்து சரிபார்ப்பதற்கான அதே KYC அணுகுமுறை பயன்படுத்தப்படும்.

என்ஆர்ஐ கணக்குகளுக்கு

# பாஸ்போர்ட் மற்றும் குடியிருப்பு விசா நகல்கள்

# வெளிநாட்டு அலுவலகங்கள்

# அனுமதி பெற்ற பத்திரத்துறை பதிவு

 

Categories

Tech |