Categories
தேசிய செய்திகள்

எஸ்பிஐ வங்கி வாடிக்கையாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு…. வட்டி விகிதம் திடீர் மாற்றம்…. புதிய ரேட் இதுதான்….!!!!

இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ வங்கி அவ்வப்போது பல மாற்றங்களை கொண்டு வருகிறது. இந்த வங்கியில் எந்த ஒரு மாற்றம் கொண்டுவரப்பட்டாலும் அது ஏராளமான மக்களை பாதிக்கின்றது.இந்நிலையில் எஸ்பிஐ வங்கி தற்போது சேமிப்பு கணக்குகளுக்கான வட்டி விகிதத்தை திருத்தியுள்ளதாக அறிவித்துள்ளது. இந்த புதிய வட்டி விகிதங்கள் கடந்து அக்டோபர் 15ஆம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளன.

அதன்படி இனி சேமிப்பு கணக்குகளுக்கு வருடத்திற்கு இரண்டு புள்ளி 70% முதல் 3 சதவீதம் வரை வட்டி வழங்கப்படுவதாக எஸ்பிஐ வங்கி அறிவித்துள்ளது. இந்த புதிய வட்டி விகிதத்தின்படி 10 கோடி ரூபாய்க்கு கீழ் பேலன்ஸ் வைத்துள்ள சேமிப்பு கணக்குகளுக்கு வருடத்திற்கு இரண்டு புள்ளி 70% வட்டி வழங்கப்படும். 10 கோடி ரூபாய்க்கு மேல் பேலன்ஸ் வைத்துள்ள சேமிப்பு கணக்குகளுக்கு மூன்று சதவீதம் வட்டி வழங்கப்படும். கமலக்கத்துறையால் முடக்கப்பட்ட வங்கி கணக்குகளுக்கும் தொடர்ந்து வட்டி செலுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |