கிரெடிட்கார்டு உபயோகத்துக்கு ஆகக்கூடிய செலவினை மேலும் அதிகரிக்கும் வகையில், பாரதஸ்டேட் வங்கியானது அதனுடைய கார்டுதாரர்களுக்கு ஒருசில கட்டணங்களைத் திருத்தியிருக்கிறது. புது கட்டணங்கள் நவம்பர் 15ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வரும். ஆகவே நவம்பர் 15ம் தேதிக்கு முன் செய்யப்படும் பரிவர்த்தனைகளுக்கு இக்கட்டணங்கள் பொருந்தாது. இது தொடர்பாக பாரதஸ்டேட் வங்கி தன் பயனாளர்களுக்கு செய்தி ஒன்றை அனுப்பி இருக்கிறது. எஸ்பிஐ தன் வாடிக்கையாளர்களுக்கு அனுப்பிய செய்தியில் இருப்பதாவது “அன்புள்ள கார்டுதாரர்களே, உங்களது கிரெடிட்கார்டிலுள்ள கட்டணங்கள் 15 நவம்பர் 22 முதல் திருத்தப்படும்” என்று கூறியுள்ளது. அதுமட்டுமின்றி விபரங்களுக்கு இணையதளத்தைப் பார்வையிடும்படி வங்கி தன் வாடிக்கையாளர்களைக் கேட்டுக் கொண்டுள்ளது.
எஸ்பிஐ இஎம்ஐ பரிவர்த்தனைகளுக்குரிய கட்டணங்களைத் திருத்தியிருந்தாலும், கிரெடிட்கார்டுகளைப் பயன்படுத்தி வாடகை செலுத்துவதற்கு புது கட்டணத்தை வங்கி விதித்துள்ளது. இதனிடையில் கிரெடிட்கார்டின் கட்டணங்களானது நவம்பர் 15-22முதல் திருத்தம் செய்யப்படும். மர்சண்ட் இஎம்ஐ பரிவர்த்தனைகளுக்குரிய செயலாக்கக் கட்டணம் ரூபாய். 199 பொருந்தக்கூடிய வரிகள் ஆக மாற்றியமைக்கப்பட்டு இருக்கிறது. இது முன்னதாக ரூபாய்.99 + பொருந்தக் கூடிய வரிகள் என்று இருந்தது. வாடகை செலுத்தும் பரிவர்த்தனைகளுக்குரிய செயலாக்கக் கட்டணம் ரூபாய். 99 + பொருந்தக்கூடிய வரிகள் ஆக இருக்கும்” என வங்கி தெரிவித்துள்ளது. எனினும் பரிவர்த்தனை நவம்பர் 15-க்கு முன் செய்யப்பட்டு பில்லிங் சைக்கிள் நவம்பர் 15-க்குப் பிறகு இருந்தால், அப்பரிவர்த்தனைகளுக்குப் புது கட்டணங்கள் பொருந்துமா என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.
இதன் வாயிலாக கிரெடிட்டை பயன்படுத்தி வாடகை செலுத்த செயலாக்கக் கட்டணம் விதிக்கும் 2வது வங்கியாக SBI ஆனது. முன்பாக ICICI வங்கி தன் கிரெடிட்கார்டு வைத்திருப்பவர்களிடம் அக்டோபர் 20 முதல் வாடகை செலுத்துவதற்கு ஒரு சதவீத கட்டணம் வசூலிக்கப்படும் என கூறியிருந்தது. RedGiraffe, Mygate, Cred, Paytm மற்றும் Magicbricks ஆகிய பல 3ஆம் தரப்பு தளங்கள், தங்களது பயனர்களை (டெனண்டுகள்) கிரெடிட்கார்டுகளைப் பயன்படுத்தி வாடகை செலுத்த அனுமதிக்கிறது. எனினும் இதற்குப் பதில் குறிப்பிட்ட சேவைக் கட்டணத்தை வசூலிக்கிறது. இவ்வசதியை பயன்படுத்திக்கொள்ள பயனர்கள் தங்களது கிரெடிட்கார்டு விபரங்களை அந்த தளத்தில் உள்ளிட்டு, பிறகு வாடகை செலுத்தும் விருப்பத்திற்குச் சென்று பெயர், வங்கிகணக்கு எண், IFSC குறியீடு (அல்லது) உரிமையாளரின் UPI (ஒருங்கிணைந்த கட்டண இடைமுகம்) முகவரி ஆகிய விவரங்களை நிரப்பவேண்டும். இதன்பின் பயனாளர்கள் கட்டணத்தை செலுத்தலாம்.