இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான sbi வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு வசதிகளை வழங்கி வருகிறது. அதேசமயம் வாடிக்கையாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் விதமாகவும் பலவிதமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அவ்வப்போது பல புதிய வசதிகளை அறிமுகம் செய்து வரும் எஸ்பிஐ வங்கி தற்போது முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
அதாவது வாடிக்கையாளர்களுக்கு புதிய வசதியை ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வங்கி கொண்டு வந்துள்ளது. வங்கிக்கு செல்ல வேண்டும் என்ற தொந்தரவே இல்லாமல் ஆன்லைன் மூலமாக வீட்டுக் கடன் பெறுவதற்கான வசதியை எஸ்பிஐ வங்கி அறிமுகம் செய்துள்ளது. எஸ் பி ஐ யோனோ செயலி மூலம் எந்த நேரத்திலும் கடனை பெறலாம். அதாவது எஸ்பிஐ யோனோ செயலில் லாகின் செய்து best offers என்பதில் நுழைந்து SBI Realty ஆப்ஷனை கிளிக் செய்து வீட்டுக் கடனை அப்ளை செய்து பெற்றுக் கொள்ளலாம் என தெரிவித்துள்ளது.