நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கி, தனது வாடிக்கையாளர்கள்நேரடியாக வங்கி க செல்லாமல் 35 லட்சம் ரூபாய் வரை கடனுக்கு விண்ணப்பிக்கலாம் . யோனோ என்ற புதிய செயலி மூலமாக எஸ்பிஐ வங்கி புதிய அமைப்பைத் தற்போது கொண்டு வந்துள்ளது. இந்த செயலி மூலம் கடன் விண்ணப்பம் முதல் கதல் வரை அனைத்து ஆவணங்களையும் டிஜிட்டல் முறையில் சமர்ப்பிக்க முடியும்.
இதில் தனி நபர்களுக்கு மட்டுமே விண்ணப்பிக்க இயலும். வங்கியில் வாடிக்கையாளர்களை டிஜிட்டல் முறைக்கு நெருக்கமாக கொண்டு வருவதற்காக எஸ்பிஐ வங்கி இந்த புதிய முறையை அறிமுகம் செய்துள்ளது. இருந்தாலும் இந்த சேவை அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் கிடைக்காது. யோனோ செயலி மூலமாக மாதாந்திர எஸ்பிஐ வாடிக்கையாளர்கள் மட்டுமே இந்த கடனுக்கு விண்ணப்பிக்க முடியும். கடன் தொடர்பான அனைத்து நடவடிக்கைகளும் ஆன்லைனில் செய்யப்படுகின்றன.
யோனோ செயலி மூலம் கடன் பெற விண்ணப்பிக்கலாம்?
எஸ்பிஐயில் கட்டாயம் சம்பள கணக்கு இருக்க வேண்டும். வாடிக்கையாளர்களின் குறைந்தபட்ச சம்பளம் 15 ஆயிரம் ரூபாய் ஆக இருக்க வேண்டும். மத்திய மற்றும் மாநில அரசு ஊழியர்கள்,அரசு கட்டுப்பாட்டில் உள்ள நிறுவனங்களின் பணியாளர்கள் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட கார்ப்பரேட் நிறுவனங்களின் பணியாளர்களுக்கு இந்த கடன் வசதி கிடைக்கின்றது.