Categories
தேசிய செய்திகள்

எஸ்பிஐ வாடிக்கையாளர்களே…. இனி வாட்ஸ் அப் இருந்தா மட்டும் போதும்…. வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!!

இந்தியாவின் மிகப்பெரிய வங்கியான எஸ்பிஐ வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு புது புது சேவைகளை அவ்வப்போது அறிமுகப்படுத்தி வருகின்றது. அதன்படி தற்போது எஸ் பி ஐ வங்கி தனது வாடிக்கையாளர்கள் whatsapp வழியாக வங்கி சேவைகளை பயன்படுத்துவதற்கான வசதியை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. வாடிக்கையாளர்கள் அனைவருக்கும் whatsapp மூலமாக வங்கி சேவைகள் விரைவில் அறிமுகப்படுத்தப்படும் என்று எஸ் பி ஐ தலைவர் தினேஷ் குமார் தெரிவித்துள்ளார்.

இந்த புதிய சேவையின் மூலமாக வாடிக்கையாளர்கள் whatsapp மூலமாக sbi வங்கியின் பல்வேறு சேவைகளை பயன்படுத்திக் கொள்ள முடியும். இருந்தாலும் இதில் என்னென்ன சேவைகள் வழங்கப்படும் என்பது குறித்த விவரங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை. தற்போது எஸ்பிஐ கிரெடிட் கார்டு பயனர்களுக்கு மட்டுமே whatsappபில் SBI Card whatsapp connect என்ற பெயரில் சேவைகள் வழங்கப்பட்டு வருகின்றது.

இதன் மூலமாக வாட்ஸ் அப் வழியாக ரிவார்டு பாயிண்ட்ஸ், கட்டணம் செலுத்துவது மற்றும் பேலன்ஸ் உள்ளிட்ட சேவைகளை பயனர்கள் பயன்படுத்திக் கொள்ள முடியும். இந்தியாவில் ஏற்கனவே எச்டிஎப்சி வங்கி, ஐ சி ஐ சி ஐ வங்கி, இண்டஸ் இண்ட் வங்கி, பாங்க் ஆப் மகாராஷ்டிரா,ஆக்சிஸ் பேங்க் உள்ளிட்ட பல்வேறு வங்கிகள் வாட்ஸ் அப்பில் வங்கி சேவைகளை வழங்கி வரும் நிலையில் தற்போது sbi வங்கி அனைத்து வாடிக்கையாளர்களும் வங்கி சேவைகளை பெரும் வகையில் whatsapp வங்கி சேவையை விரைவில் அறிமுகப்படுத்த உள்ளது. இந்த அறிவிப்பு sbi வங்கி வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |