பாடகர் எஸ்பி பாலசுப்ரமணியன் உடல் தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவமனை தெரிவித்துள்ளது.
பாடகர் எஸ்.பி பாலசுப்பிரமணியம் அவர்கள் நெல்சன் மாணிக்கம் ரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த ஐந்தாம் தேதி அனுமதிக்கப்பட்டிருக்கிறார். அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபின்பு எஸ்பி பாலசுப்ரமணியன் யாரும் அச்சப்பட வேண்டாம் என்ற தகவலை சமூக வலைத்தளம் மூலம் தெரிவித்திருந்தார். தொடர்ச்சியாக அவர் கிட்டத்தட்ட 12நாட்களுக்கு மேலாக நல்ல நிலையில் தான் இருந்தார்.
கடந்த 13ஆம் தேதி இரவு முதல் அவரது உடல்நிலை பாதிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து அவருக்கு உயிர் காக்கும் கருவிகளின் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனிடையே அவருடைய மகன் சமூக வலைதளங்கள் மூலமாக தொடர்ச்சியாக எஸ் பி பாலசுப்பிரமணியன் நல்ல நிலையில் இருக்கின்றார் என்ற தகவலை தொடர்ந்து பதிவிட்டு வந்தார். இந்த நிலையில் தற்போது அவரின் உடல்நிலை தற்போது மோசமாக இருப்பதாக மருத்துவமனை தெரிவித்துள்ளது.