Categories
சினிமா தமிழ் சினிமா

எஸ்.ஏ.சந்திரசேகர் கட்சியின்…. பொருளாளராக நான் இல்லை…. விஜய் தாயார் ஷோபா பேட்டி…!!

விஜய்யின் தாயார் தன் கணவர் தொடங்கிய கட்சியின் பொருளாளராக இல்லை என்று பேட்டியளித்துள்ளார்.

இளைய தளபதி விஜய் அவர்கள் சமீபத்தில், அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கம் என்ற பெயரில் கட்சி தொடங்கி உள்ளதாக ஊடகங்களில் தகவல்கள் வெளியானது. இந்த கட்சியின் செயலாளராக விஜய்யின் தந்தை எஸ்.ஏ சந்திரசேகர் மற்றும் பொருளாளராக விஜய்யின் தாயார் ஷோபா ஆகியோரின் பெயர் தேர்தல் ஆணையத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது சம்பந்தமான புகைப்படங்கள் வலைதளங்களில் பரவி வந்தன.

இந்நிலையில் நடிகர் விஜய்யின் தாய் ஷோபா தற்போது தனியார் செய்தி தொலைக்காட்சி ஒன்றில் அளித்த பேட்டியில் கூறியதாவது, “என் கணவர் எஸ்.ஏ சந்திரசேகர் தொடங்கிய கட்சியின் பொருளாளராக நான் இல்லை. அவர் என்னிடம் அசோஷியேஷன் தொடங்குவதற்காக மட்டுமே மட்டுமே கையெழுத்து வாங்கினார். மேலும் கட்சி தொடங்குவதற்காக கையெழுத்து போடும் படி கூறிய போது நான் கையொப்பம் இடவில்லை” என்று தெரிவித்துள்ளார்.

Categories

Tech |