சாத்தான்குளம் தந்தை – மகன் கொல்லப்பட்ட வழக்கில் எஸ்.ஐ பாலகிருஷ்ணன், தலைமை காவலர் முருகன் கைது செய்யப்பட்டுள்ளனர். தீவிர தேடுதலுக்கு பின்னர் அவர்கள் இரண்டு பேரையும் சிபிசிஐடி போலீசார் கைது செய்தனர். எஸ்.ஐ ரகு கணேஷ் நேற்று கைது செய்யப்பட்ட நிலையில் தொடர்ந்து மேலும் 2 பேரை கைது செய்தனர் சிபிசிஐடி போலீசார். கொலை வழக்கு பதிவான நிலையில் தலைமறைவாக உள்ள தலைமை காவலர் முத்துராஜ் வலைவீசி சிபிசிஐடி போலீசார் தேடி வருகின்றனர்.
Categories