நடிகை கீர்த்தி செட்டி சிவகார்த்திகேயனுடன் இணைந்து நடிக்க விருப்பம் தெரிவித்துள்ளார்.
வைஷ்ணவ் தேஜ் நடிப்பில் வெளியான உப்பனா திரைப்படத்தின் மூலம் சினிமா உலகிற்கு அறிமுகமான கீர்த்தி செட்டி இத்திரைப்படத்தில் விஜய் சேதுபதியின் மகளாக நடித்திருந்தார். தற்போது சூர்யா நாற்பத்தி ஒன்று திரைப்படத்தில் நடிக்கின்றார். இதன் மூலம் தமிழ் சினிமா உலகிற்கு அறிமுகமாக இருந்தார். இத்திரைப்படத்தை பாலா இயக்க 2டி என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் தயாரிக்கின்றது. மேலும் ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார். சூர்யாவின் படத்தில்தான் இவர் முதலில் கமிட்டானார். ஆனால் லிங்குசாமியின் இருமொழிப்படம் தமிழில் வெளியாகவுள்ள நிலையில், அந்தப் படம் இவரது முதல் படமாக மாறியுள்ளது. கீர்த்தி ஷெட்டி தற்போது பல மொழி திரைப்படங்களில் கமிட்டாகி பிசியாக நடித்து வருகின்றார்.
அண்மையில் இவரின் புல்லட் பாடல் வெளியாகி ரசிகர்களிலேயே நல்ல வரவேற்பை பெற்று மிகவும் ட்ரெண்டாகி உள்ளது. இவர் தற்பொழுது சிவகார்த்திகேயனுடன் இணைந்து நடிக்க வேண்டும் என விருப்பம் தெரிவித்திருக்கின்றார். இந்த நிலையில் இவரின் ஆசை விரைவில் நிறைவேற இருப்பதாக செய்தி வெளியாகியிருக்கிறது. இயக்குனர் அஸ்வினுடன் சிவகார்த்திகேயன் இணையும் இத்திரைப்படத்தில் கீர்த்தி செட்டி தான் கதாநாயகியாக நடிக்க இருப்பதாக செய்திகள் வருகின்றது.