Categories
சினிமா தமிழ் சினிமா

எஸ்.ஜே.சூர்யாவின் ‘கடமையை செய்’… எதிர்பார்ப்பை கிளப்பும் பர்ஸ்ட் லுக் போஸ்டர்…!!!

எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள கடமையை செய் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது .

தமிழ் திரையுலகில் வாலி, குஷி போன்ற படங்களை இயக்கி பிரபலமடைந்தவர் எஸ்.ஜே.சூர்யா. இதையடுத்து இவர் நியூ, அன்பே ஆருயிரே, இசை, மான்ஸ்டர், நெஞ்சம் மறப்பதில்லை உள்ளிட்ட படங்களில் ஹீரோவாக நடித்து அசத்தினார். மேலும் இவர் மெர்சல், ஸ்பைடர் ஆகிய படங்களில் வில்லனாக நடித்திருந்தார். தற்போது இவர் கடமையை செய், மாநாடு, டான் ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

இதில் வெங்கட்ராகவன் இயக்கத்தில் எஸ்.ஜே.சூர்யா ஹீரோவாக நடித்துள்ள படத்தில் பிக்பாஸ் பிரபலம் யாஷிகா கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் இந்த படத்திற்கு அருண்ராஜ் இசையமைத்துள்ளார். இந்நிலையில் கடமையை செய் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. இந்த வித்தியாசமான பர்ஸ்ட் லுக் போஸ்டர் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

Categories

Tech |