Categories
சினிமா தமிழ் சினிமா

“எஸ்.ஜே. சூர்யாவிற்கு அடித்த ஜாக்பாட்”…. பட்டைய கிளப்ப போகுது படம்…. சிறப்பான சம்பவம் கன்பார்ம்….!!!

இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் ஆர்சி 15 படத்தில் நடிகர் ஸ்.ஜே.சூர்யா இணைய உள்ளார்.

ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வந்த இந்தியன் 2 படத்தின் தயாரிப்பு நிறுவனம் லைகாவுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் இந்தியன் 2 படத்தை முடிக்காமல் இயக்குனர் ஷங்கர், ராம் சரண் நடிக்கும் படத்தை இயக்கி வருகிறார். மேலும் இந்தியில் அந்நியன் படத்தை ரன்வீர் சிங் நடிப்பில் ரீமேக் செய்ய உள்ளதாக அறிவித்துள்ளார். தனது அடுத்த படமான ராம் சரண் நடிப்பில் பிரம்மாண்டமாக தில் ராஜ் தயாரிப்பில் இயக்கி வருகிறார் ஷங்கர். இது தன்னுடைய 50-வது படம் என்பதால் இப்படத்தை பிரம்மாண்டமாக உருவாக்க உள்ளார். மேலும் ஆர்சி 15 என தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள இப்படத்தின் ஹீரோயினாக கியாரா அத்வானி நடிக்க உள்ளார். மேலும் இப்படத்தில் ராம் சரண் இரட்டை வேடங்களில் நடிக்கிறார். இப்படத்தின் மற்றொரு கதாநாயகியாக நடிகை அஞ்சலி நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்த படத்தின் இசையமைப்பாளர் தமன் ஆவார். இந்நிலையில் எஸ்.ஜே.சூர்யா வில்லனாக நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் அண்மையில் வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியான மாநாடு படம்  சூப்பர் கம்பேக் படமாக அமைந்தது. இதனால் ரசிகர்கள் மத்தியில் எஸ்.ஜே.சூர்யாவின் நடிப்பு மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இதனைத் தொடர்ந்து ஆர்சி 15 படத்தில் வில்லனாக நடிப்பதற்கு அவர் மிகப்பெரிய சம்பளம் கேட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த செய்தி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை கொண்டுள்ளது.

Categories

Tech |