தமிழ் சினிமாவில் இயக்குனராகவும் நடிகராகவும் வலம் வருபவர் எஸ்.ஜே சூர்யா. இவர் தற்போது பொம்மை என்ற சைக்கோ த்ரில்லர் திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் எஸ்.ஜே சூர்யாவுக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடித்துள்ளார். இந்த படத்தை இயக்குனர் ராதா மோகன் இயக்கியுள்ளார்.
இந்நிலையில் யுவன் சங்கர் ராஜா இசை அமைத்துள்ள பொம்மை திரைப்படத்தின் டிரெய்லரை நடிகர் சிவகார்த்திகேயன் வெளியிட்டுள்ளார். இந்த படத்தின் டிரெய்லர் வெளியாகி தற்போது ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. மேலும் பொம்மை திரைப்படம் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.