Categories
மாநில செய்திகள்

எஸ்.டி.பி.ஐ கட்சி அலுவலகத்தில் “இன்கம் டேக்ஸ்”…. இது பழிவாங்கும் நடவடிக்கை…. சீமான் ஆதங்கம்….!!!!

கோவை எஸ்.டி.பி.ஐ கட்சி அலுவலகத்தில் நடத்தப்பட்டிருக்கும் வருமானவரிச் சோதனை பா.ஜ.க அரசின் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என்று சீமான் கண்டனம் தெரிவித்து உள்ளார். இதுகுறித்து சீமான் விடுத்துள்ள அறிக்கையில் “எஸ்.டி.பி.ஐ கட்சியின் கோவை மாவட்ட தலைமை அலுவலகத்தில் வருமான வரித்துறை சோதனை மேற்கொண்டு அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையை அரங்கேற்றியுள்ள பா.ஜ.க அரசின் எதேச்சதிக்காரச் செயல் வன்மையான கண்டனத்திற்குரியது. தன்னாட்சி அமைப்புகளை தன் கைப்பாவையாக மாற்றி சனநாயக அமைப்புகளையும், இயக்கங்களையும் அச்சுறுத்தி, அழித்தொழிக்கும் முயற்சியில் மோடி அரசு தொடர்ந்து ஈடுபட்டு வருவது நாட்டினை பேரழிவினை நோக்கி இட்டுச்செல்லவே வழிவகுக்கும்.

இது போன்ற அதிகார அத்துமீறல்களை தொடர்வதை இந்திய ஒன்றியத்தை ஆளும் பா.ஜ.க அரசு நிறுத்திக்கொள்வதோடு, அதலபாதாளத்திற்குப் போயுள்ள நாட்டின் பொருளாதாரத்தைச் சீரமைக்கவும், அதிகரித்துள்ள வேலையில்லா திண்டாடத்தைக் குறைக்கவும் தேவையான நடவடிக்கைகளில் ஈடுபடவேண்டும். இல்லையயென்றால் இலங்கையில் மக்கள் புரட்சியினால் அந்நாட்டுக் கொடுங்கோன்மை ஆட்சியாளர்களுக்கு ஏற்பட்ட நிலைமையை இந்திய ஒன்றியத்தை ஆளும் மோடி அரசாங்கமும் எதிர்கொள்ளும் நாள் வெகுதொலைவில் இல்லை என்று எச்சரிக்கிறேன்” என அவர் கூறியுள்ளார்.

Categories

Tech |