கொரோனா பாதிப்பால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் எஸ்.பி.பி உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை அறிக்கை வெளியிட்டிருக்கிறது.
பிரபல பாடகர் எஸ்.பி.பி-க்கு கொரோனா உறுதிசெய்யப்பட்ட நிலையில், அவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், அவரின் உடல்நிலை குறித்து அவருடைய மகன் எஸ்.பி.பி சரண் தினமும் வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டுக் கொண்டிருக்கிறார். நேற்று அவர் வெளியிட்ட வீடியோ பதிவில், ” என் தந்தை முன்பைவிட தற்போது கொஞ்சம் நன்றாகவே மூச்சு விடுகிறார். அதனை மருத்துவர்கள் நல்ல முன்னேற்றமாக பார்க்கிறார்கள். என் தந்தை நிச்சயம் குணமடைந்து வீடு திரும்புவார்” என்று அவர் கூறியுள்ளார்.
தற்போது எஸ்.பி.பி உடல்நிலை குறித்து மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியம் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக இருக்கிறது. அவர் உடல்நிலையை மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்துக் கொண்டிருக்கிறார்கள். சுவாசத்தை சீராக வைத்துக் கொள்வதற்கு தொடர்ந்து எக்மோ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது” என்று கூறப்பட்டுள்ளது.