Categories
சினிமா தமிழ் சினிமா

“எஸ்.பி.பி மறைவு” மனதால் விவரிக்க முடியவில்லை…. எஸ்.ஜானகி இரங்கல் …!!

பிரபல பின்னணிப் பாடகரான எஸ்.பி.பி மறைவுக்கு பாடகி ஜானகி இரங்கல் தெரிவித்துள்ளரர் ;

திரைதுறையை சேர்ந்த பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் சென்னை மருத்துவமனையில் கொரோனா  சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் நேற்று திடீர்  மரணம் அடைந்தார். அவரது மறைவிற்கு  திரையுலகினர் மற்றும்  பல்வேறு துறையை சேர்ந்தவர்களும் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். மற்றும் ஆழ்த்த இரங்கலை தெரிவித்தனர். எஸ்.பி.பி. மறைவை பற்றி பாடகி எஸ். ஜானகி கூறுவதாவது ஆந்திராவில்நடந்த  ஒரு  இசை நிகழ்ச்சியில் எஸ்.பி.பி.அவரை முதலில் சந்தித்தேன். சிறுவயது உடைய  அவர் மிகவும்  திறமையாக பாடினார் நான் அவரை பெரிய பாடகராக உயர்வாய் என வாழ்த்தினேன் பிறகு சிறந்த பாடகாராகவும் உயர்ந்தார்.

அவருடன் இணைந்து 1980,1990-களில் ஒரே நாளில் பல பாடல்களை பாடினோம். அந்த காலத்தில் நாங்கள்  சந்திக்காத   நாட்கள் குறைவு. அவர்  ரிக்கார்டிங் மையத்தை காமெடி செய்து கலகலப்பாக வைத்திருப்பார். அது எல்லாம் பசுமையான நினைவுகள். என்மீது அதிக அன்பு கொண்டவர். நான் நடுவராக இருந்த  இசை நிகழ்ச்சியை பற்றி மறக்காமல் கூறுவார் . அவரது மறைவு தகவலை பற்றி அறிந்த தருணம் முதலே  என் மனநிலை இயல்பாக இல்லை. மனம் விவரிக்க முடியாத துயரத்தில் தவிக்கிறது. அவரது ஆன்மா சாந்தியடைய இறைவனை பிராரர்த்திக்ககிறேன் என இவ்வாறு கூறினார் .

Categories

Tech |