அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். 5 பேர் கொண்ட குழுவினர் சோதனை நடத்தி வருகின்றனர். எஸ்.பி வேலுமணியிடம் வருமானம் வருமான வரித்துறை அதிகாரிகள் கிடுக்கிப்பிடியான கேள்விகளை கேட்டு துருவி துருவி விசாரணை நடத்தி வந்தனர்.
இந்நிலையில் அவரிடம் நடத்தப்பட்ட விசாரணை தற்போது நிறைவு பெற்றுள்ளது. காலை தொடங்கி சுமார் 10 மணி நேரம் நடைபெற்ற இந்த விசாரணையில் ரூ.13.8 இலட்சம், ரூ.2 கோடிக்கான வைப்புத்தொகை ஆவணம், 9 நிறுவனங்களின் ஆவணம், டெண்டர் தொடர்பான ஆவணம் ஆகியவற்றை லஞ்ச ஒழிப்புத்துறையினர் கைப்பற்றியுள்ளனர். மேலும் 55 இடங்களில் ரெய்டு தொடர்கிறது.