Categories
மாநில செய்திகள்

எஸ்.பி வேலுமணியின் உதவியாளர் வீட்டில்…. வருமானவரி துறையினர் சோதனை…..!!!!

முன்னாள் அமைச்சரான எஸ்.பி வேலுமணியின் உதவியாளர் சந்தோஷின் தம்பியான வசந்த குமார் இல்லத்தில் வருமானவரி துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

கோவை வட வள்ளியை சேர்ந்தவர் என்ஜினீயர் சந்திரசேகர். இவர் கோவை புறநகர் தெற்கு மாவட்ட அ.தி.மு.க எம்.ஜி.ஆர். இளைஞரணி செயலாளராக இருக்கிறார். இவர் எஸ்.பி வேலுமணிக்கு நெருக்கமானவர் ஆவார். சென்ற 6ஆம் தேதி சந்திரசேகர் வீடு மற்றும் சகோதரர், சகோதரிகள் வீடு உட்பட 6 இடங்களிலும் சோதனை நடைபெற்றது.

அந்த சோதனையில் பல ஆவணங்கள் மற்றும் லேப்டாப்பை காவல்துறையினர் எடுத்து சென்றதாக கூறப்பட்டது. இந்த நிலையில் அவரது நண்பர் சந்திர பிரகாஷ் கோவை பீளமேட்டில் கே.சி.பி. நிறுவனம் நடத்தி வருகிறார். இங்கு 5வது நாளாக கே.சி.பி. நிறுவனம், ஆலயம் அறக்கட்டளையிலும் தொடர் சோதனை நடந்து வருகிறது.  இச்சூழ்நிலையில் நள்ளிரவு முதல் முன்னாள் அமைச்சரான எஸ்.பி வேலுமணியின் உதவியாளர் சந்தோஷின் தம்பியான வசந்தகுமார் இல்லத்தில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |