Categories
மாநில செய்திகள்

எஸ்.பி.வேலுமணி ஊழல் புகார்…. 4 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக்கு தொடர்பா?…. வெளியான அதிர்ச்சித் தகவல்…!!!

சென்னை, கோவை மாநகராட்சி முன்னாள் ஆணையர்களான பிரகாஷ், விஜயகார்த்திகேயன் உள்ளிட்டவர்கள் வேலுமணி முறைகேடுகளுக்கு உதவியாக இருந்தனர் என்று தகவல் வெளியாகி உள்ளது. அது மட்டுமில்லாமல் சென்னை மாநகராட்சி துணை ஆணையராக இருந்த கந்தசாமி, மதுசூதனன் ரெட்டி ஆகியோரும் முறைகேடுகளுக்கு உதவியாக இருந்தனர் என்று கூறப்படுகிறது. சென்னை மாநகராட்சி தலைமை பொறியாளராக இருந்த நந்தகுமார், பொறியாளராக இருந்த புகழேந்தி வழக்கில் சேர்க்க முடிவு செய்யப்பட்டுள்ளது. முதன்மை சுகாதார அதிகாரி செந்தில்நாதன் மேலும் சில அதிகாரிகள் செய்ய அனுமதி கோரப்பட்டுள்ளது.

அதனை தொடர்ந்து ஐஏஎஸ் அதிகாரிகள் செயல்பாட்டால் அரசுக்கு பல நூறு கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டதை லஞ்ச ஒழிப்புத் துறை கண்டறிந்துள்ளது. அதுமட்டுமில்லாமல் வேலுமணி அமைச்சராக இருந்தபோது முறைகேடாக பல நூறு கோடி ரூபாய் டென்டர் ஒதுக்க அதிகாரிகள் உதவிய ஆவணங்கள் சிக்கியுள்ளது. சாலை மற்றும் தெருவிளக்கு அமைத்தல் உள்ளிட்ட பல உள்ளாட்சி பணிகளில் முறைகேடு செய்ததற்கான ஆதாரங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து அரசின் அனுமதி கிடைத்ததும் ஐஏஎஸ் அதிகாரிகள் உள்ளிட்ட 12 அதிகாரிகளே வழக்கில் சேர்க்க லஞ்ச ஒழிப்புத்துறை ஆயுதம் செய்து வருகிறது மேலும் லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள் சேர்ப்பது குறித்து அரசு தீவிர பரிசீலனை செய்து வருகிறது.

Categories

Tech |