Categories
மாநில செய்திகள்

எஸ்.பி வேலுமணி மீதான ஊழல் வழக்கு…. லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு….!!!

எஸ்.பி வேலுமணி மீதான ஊழல் வழக்கு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

சென்னை உயர் நீதிமன்றத்தில் தி.மு.க கட்சியின் அமைப்பு செயலாளர் ஆர்.எஸ் பாரதி மற்றும் அறப்போர் இயக்கம் சார்பில் கடந்த அதிமுக ஆட்சியின்போது ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில் சென்னை மற்றும் கோயம்புத்தூர் போன்ற பகுதிகளில் நடைபெற்ற பல்வேறு பணிகளுக்கு விடப்பட்ட டெண்டரில் முறைகேடுகள் நடந்திருக்கிறது. இது தொடர்பாக முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணியிடம் விசாரணை நடத்த வேண்டும் என மனுவில் குறிப்பிடப் பட்டிருந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி தாக்கல் செய்யப்பட்ட மனு தொடர்பான எந்த ஒரு ஆதாரங்களும் இல்லை எனக் கூறி வழக்கை முடித்து வைத்தார்.

இந்நிலையில் தற்போது எஸ்.பி வேலுமணி மீதான ஊழல் வழக்கு தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறைஅதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனையடுத்து எஸ்.பி வேலுமணிக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனு தொடர்பான வழக்கு இன்று நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது  எஸ்.பி வேலுமணி தன் மீது சுமத்தப்பட்ட மனு தொடர்பான வழக்கை ரத்து செய்ய வேண்டும் என நீதிபதியிடம் மனு தாக்கல் செய்தார். இந்த மனு தொடர்பான வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 11-ம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்த்னர். மேலும் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் மேற்கொண்டு வரும் விசாரணை குறித்த அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டர்.

Categories

Tech |