ரஷ்யாவிடமிருந்து எஸ்-400 ஏவுகணை பாதுகாப்பு அமைப்பை இந்தியா வாங்குவதற்கான தடைகளுக்கு எதிரான விலக்கு அளிக்கும் சட்டத்திருத்தத்தை அமெரிக்க பிரதிநிதிகள் சபை குரல் வாக்கெடுப்பு வாயிலாக நிறைவேற்றியுள்ளது. அமெரிக்க தேசிய பாதுகாப்பு அங்கீகார சட்டத்தின் (என்.டி.ஏ.ஏ) பரிசீலனையின்போது சட்டத்திருத்தம் திருத்தத்தின் ஒரு பகுதியாக நிறைவேற்றப்பட்டது. சீனா போன்ற ஆக்கிரமிப்பாளர்களைத் தடுப்பதற்கு உதவும் அடிப்படையில் தடைகள் வாயிலாக அமெரிக்காவின் எதிரிகளை எதிர்க்கும் சிஏஏடிஎஸ்ஏ சட்டத்தை இந்தியாவிற்கு வழங்க பிடன் நிர்வாகத்தை தன் அதிகாரத்தைப் பயன்படுத்துமாறு இத்திருத்தம் வலியுறுத்துகிறது. சிஏஏடிஎஸ்ஏ என்பது கடுமையான அமெரிக்க சட்டம் ஆகும்.
இது 2014ல் கிரிமியாவை ரஷ்யா இணைத்ததற்கும், 2016 அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் தலையிட்டதற்கும் பதில் அளிக்கும் வகையில் ரஷ்யாவிடம் இருந்து பெரிய பாதுகாப்பு சாதனங்களை வாங்கும் நாடுகள் மீது பொருளாதாரத்தடைகளை விதிக்க அமெரிக்க நிர்வாகத்தை அங்கீகரிக்கிறது. கலிபோர்னியாவின் அமெரிக்க பிரதிநிதி கன்னா கூறியிருப்பதாவது “சீனாவின் ஆக்கிரமிப்பு அதிகரித்து வரும் சூழ்நிலையில், அமெரிக்கா இந்தியாவுடன் நிற்கவேண்டும். இந்திய சிஏஏடிஎஸ்ஏ துணைத்தலைவராக, நம் நாடுகளுக்கு இடையேயான கூட்டாண்மையை வலுப்படுத்தவும், இந்திய சீன எல்லையில் இந்தியா தன்னைத் தற்காத்துக் கொள்வதை உறுதிசெய்யவும் நான் உழைத்து வருகிறேன். இந்த திருத்தம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது ஆகும். அத்துடன் இது இருகட்சிகளின் அடிப்படையில் சபையை நிறைவேற்றுவதைப் பார்க்க நான் பெருமைப்படுகிறேன்” என்று அவர் கூறினார். இச்சட்டம் 2017 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்டது.
ரஷ்ய பாதுகாப்பு மற்றும் புலனாய்வு துறைகளுடன் பரிவர்த்தனைகளில் ஈடுபடும் எந்தவொரு நாட்டிற்கும் எதிராக அமெரிக்க அரசாங்கத்தால் தண்டனை நடவடிக்கைகளை வழங்குகிறது. 400 கி.மீ தொலைவில் வரும் போர்விமானங்கள், ஏவுகணைகள் மற்றும் ஆளில்லாத குட்டி விமானங்கள் போன்றவற்றை வழிமறித்து தாக்கி அழிக்கும் திறன்கொண்ட ரஷ்யாவின் எஸ்.400 ரக அதி நவீன வான்வழி பாதுகாப்பு ஏவுகணைகளை இந்தியா கொள்முதல் செய்துள்ளது. சுமார் ரூபாய் 40 ஆயிரம் கோடிக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ள இந்த ஏவுகணை தடுப்பு பாதுகாப்பு அமைப்பின் முதல் தொகுப்பை இந்தியாவிடம் ரஷ்யா ஒப்படைத்துள்ளது. இந்த முதல் தொகுப்பை பஞ்சாப் செக்டார் பகுதியில் பாதுகாப்புபடையானது நிலைநிறுத்தி இருக்கிறது. இதனிடையில் ரஷ்யாவிடமிருந்து எஸ் 400 ஏவுகணை தடுப்பு அமைப்பை இந்தியா வாங்க அமெரிக்கா தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்துவந்தது.