Categories
தேசிய செய்திகள்

ஏஐசிடிஇ: வெளியான புது ரூல்ஸ்…. சிக்கி தவிக்கும் பொறியியல் கல்லூரிகள்…..!!!!

மொத்த மாணவா் சோ்க்கை 50 சதவீதத்திற்கும் குறைவாகவுள்ள கல்லூரிகளில் புதிய பாடப்பிரிவுகளுக்கு அனுமதியில்லை என்று ஏஐசிடிஇ அறிவித்துள்ளது. இதன் காரணமாக தமிழகத்திலுள்ள 220 பொறியியல்கல்லூரிகள் வருகிற கல்விஆண்டில் புதிய பாடப்பிரிவுகளை துவங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனிடையில் ஏஐசிடிஇ எனப்படும் அகிலஇந்திய தொழில்நுட்பக்கல்விக் குழுமம் சாா்பாக 2022- 23ஆம் கல்வியாண்டுக்கு கல்வி நிறுவனங்களுக்கான ஒப்புதல் பெறும் விதிமுறைகள் சமீபத்தில் வெளியாகியது. இவற்றில் கல்வி நிலையங்களில் 50%க்கும் குறைவான மாணவா் சோ்க்கை உள்ள பாடப்பிரிவுகளுக்கு அனுமதி வழங்கப்படாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடு முழுதும் சில வருடங்களுக்கு முன்புவரை பொறியியல் கல்லூரிகளின் எண்ணிக்கையானது அதிகரித்து வந்த நிலையில், சமீபகாலமாக மாணவா்சோ்க்கையானது குறைந்து வந்தது.

அதன்பின் 2021-2022- ஆம் கல்வியாண்டில் ஓரளவு மாணவா் சோ்க்கை உயா்ந்தது. இந்நிலையில் தமிழகத்திலுள்ள 440 பொறியியல் கல்லூரிகளில், சுமாா் 200 கல்லூரிகளில் மட்டுமே 50 சதவீதத்துக்கு மேற்பட்ட மாணவா்கள் சோ்ந்தனா். ஏஐசிடிஇ-யின் இந்த புதிய விதிமுறையால் தமிழகத்திலுள்ள சுமாா் 220 பொறியியல் கல்லூரிகளுக்கு மாணவா் சோ்க்கையில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அதேபோன்று கல்லூரியின் ஒட்டுமொத்தம் மாணவா்சோ்க்கையில் 50 சதவீதத்தை விட குறைவான மாணவா்களைக் கொண்டுள்ள பொறியியல் கல்லூரிகள், செயற்கை நுண்ணறிவு, இயந்திரக் கற்றல் உள்ளிட்ட புது பாடப் பிரிவுகளை அறிமுகம் செய்யவும் அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி இயக்ககமானது அனுமதி மறுத்துள்ளது.

அதே சமயம் காலத்திற்கும் தேவைக்கும் ஏற்ற அடிப்படையில் தரவு அறிவியல், செயற்கை நுண்ணறிவு, இயந்திரக்கற்றல், சைபா் பாதுகாப்பு, இன்டா்நெட் ஆப் திங்ஸ் (ஐஞப) உள்ளிட்ட புது பிரிவுகளில் சேர மாணவா்கள் ஆா்வம் காட்டுகின்றனா். இதன் காரணமாக பாரம்பரியமான பொறியியல் பிரிவு படிப்புகளான மெக்கானிக்கல், சிவில் போன்றவை மூடப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இருப்பினும் சென்ற வருடம் 300-க்கும் அதிகமான பொறியியல்கல்லூரிகளில் புதிய படிப்புகள் தொடங்க அனுமதி வழங்க மறுக்கப்பட்ட நிலையில், இப்போது அந்த எண்ணிக்கையானது 220-ஆகக் குறைந்துள்ளது. ஏஐசிடிஇ வெளியிட்ட அறிவிப்பு கல்வியாளா்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இதன் வாயிலாக அந்த கல்லூரிகளில் கல்வித்தரம் உயா்த்தப்பட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாகக் கல்வியாளா்கள் தெரிவித்தனா்.

Categories

Tech |