Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

ஏகே-61… அஜித்தின் கதாபாத்திரம் என்ன தெரியுமா…? எச்.வினோத் தகவல்…!!!

ஏகே 61 திரைப்படத்தில் அஜித்தின் கதாபாத்திரம் குறித்து இயக்குனர் வினோத் தகவலை வெளியிட்டுள்ளார்.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான அஜித் நடிப்பில் அண்மையில் வெளியான திரைப்படம் வலிமை இத்திரைப்படத்தை எச்.வினோத் இயக்கியிருந்தார். அஜித்துக்கு ஜோடியாக ஹீமா குரேஷி நடித்திருந்தார். மேலும் படத்தை போனிகபூர் தயாரித்திருக்கிறார். இத்திரைப்படம் இரண்டு ஆண்டுகளுக்கும் மேல் உருவாகிக் கொண்டிருந்த நிலையில் கடந்த பொங்கலுக்கு ரிலீசாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கொரோனா காரணமாக ரிலீஸ் தள்ளிப்போனது. இதையடுத்து பிப்ரவரி 24ஆம் தேதி திருவிழா போல் வலிமை ரிலீஸாகியது. இத்திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருந்தாலும் விமர்சனங்களையும் பெற்று இருக்கத்தான் செய்கின்றது. இத்திரைப்படம் 3 மணி நேரம் ஓடுவதாக எழுந்த விமர்சனத்தை அடுத்து படத்தின் 14 நிமிட காட்சிகள் நீக்கப்பட்டு ஒளிபரப்பப்படுகிறது.

மேலும் வினோத் இயக்கத்தில் வெளிவந்த தீரன், சதுரங்க வேட்டை போல சுவாரசியமாக இத்திரைப்படம் இல்லை என்ற விமர்சனமும் வருகின்றது. இப்படி விமர்சனங்களை வலிமை பெற்று இருந்தாலும் வசூலில் மாபெரும் வெற்றியைப் பெற்றுள்ளது. இத்திரைப்படமானது தமிழ்நாட்டில் மட்டும் 34 கோடி வசூலை பெற்று சாதனை படைத்திருக்கிறது. வலிமை படத்தைத் தொடர்ந்து தற்போது வினோத், அஜித், போனிகபூர் கூட்டணி மீண்டும் இணைய இருக்கின்றது. இதுகுறித்த தகவல் சென்ற மாதம் வெளியானது. இதற்கான போஸ்டரையும் போனிகபூர் இணையத்தில் பதிவிட்டிருந்தார். ஆனால் இப்படத்தில் ஜிப்ரான் இசையமைக்க இருக்கிறார். அடுத்த மாதத்தில் படப்பிடிப்பு துவங்கி வரும் தீபாவளிக்கு ரிலீசாக இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கின்றது. இத்திரைப்படத்தில் அஜித் ஹீரோ மற்றும் வில்லன் என இரு கதாபாத்திரத்திலும் நடிக்க இருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது. இது ரசிகர்களிடையே எதிர்பார்ப்பினை அதிகரிக்க செய்திருக்கின்றது.

Categories

Tech |