நடிகர் அஜித்குமாரின் ஏகே 61 திரைப்படத்தில் முன்னணி நடிககை நடிக்க உள்ளதாக தகவல் கசிந்துள்ளது.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான அஜித் தற்போது வலிமை திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். அஜித்தின் வலிமை திரைப்படமானது 3 ஆண்டுகளாக எடுக்கப்பட்டு வருகின்றது. இத்திரைப்படமானது வருகின்ற பிப்ரவரி மாதம் 24 ஆம் தேதி வெளியாக உள்ளது. இந்நிலையில் ஏகே 61 திரைப்படத்தில் மீண்டும் இக்கூட்டணி இணைய உள்ளதாக தகவல் வெளியாகி இருந்தது. இத்திரைப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக ஹீமா குரேஷி நடித்துள்ளார். இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். வலிமை திரைப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் வெளியாக இருக்கின்றது.
இதனைத் தொடர்ந்து தற்போது வலிமை படக்குழுவினர்கள் ஏகே 61 படப்பிடிப்பில் களம் இறங்கியுள்ளனர். தற்பொழுது இத்திரைப்படத்தில் நடிகை தபு நடிக்க உள்ளதாக தகவல் கசிந்திருக்கிறது. அஜித்-தபு 2000ஆம் வருடம் வெளிவந்த “கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்” திரைப்படத்தில் நடித்திருந்தனர். இந்நிலையில் இப்படத்தில் இரண்டாவது முறையாக மீண்டும் இணைய உள்ளார்கள். நடிகை தபு 9 ஒன்பது வருடங்களுக்குப் பிறகு தமிழில் மீண்டும் நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.