அஜித், “ஏகே 62” திரைப்படத்தில் வாங்வுள்ள சம்பளம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமா உலகில் உச்ச நட்சத்திரமாக வலம் அஜித் தானுண்டு தன் வேலையுண்டு என இருக்கின்றார். இவரின் நடிப்பில் அண்மையில் வெளிவந்த திரைப்படமான வலிமை கலவையான விமர்சனங்களோடு வசூல் அளவில் நல்ல வரவேற்பு பெற்று வருகின்றது. இத்திரைப்படத்தை தொடர்ந்து அடுத்து போனிகபூர் தயாரிக்க வினோத் இயக்குகின்ற திரைப்படத்தில் நடிக்கவுள்ளார் அஜீத்.
இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்க உள்ள நிலையில் இவரின் அடுத்த திரைப்படத்தை இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்க லைகா நிறுவனம் தயாரிக்க அனிருத் இசையமைக்கின்றார். இந்நிலையில் இந்த படத்திற்காக அஜித் வாங்க உள்ள சம்பளம் பற்றிய தகவல் வெளிவந்திருக்கின்றது அவர் இந்த படத்திற்கு வாங்கியுள்ள சம்பளம் 105 கோடியாம். வலிமை படத்தின் வசூல் மாபெரும் வெற்றியடைந்ததால்தான் இந்த படத்திற்கு இவ்வளவு சம்பளமாம். பாலிவுட் நடிகர்கள் தான் இவ்வளவு சம்பளம் வாங்குவார்கள் ஆனால் தற்போது அஜித் அவர்களை மிஞ்சும் அளவிற்கு சம்பளம் வாங்குவதாக ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர் குறிப்பிடத்தக்கது.