Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

ஏகே-62… “படத்துல அதெல்லாம் இருக்கவே கூடாது”… விக்னேஷ்சிவனிடம் கண்டிஷன் போட்ட அஜித்…!!!

அஜித் தனது 62வது திரைப்படத்தில் விக்னேஷ்சிவனிடம் சில கண்டிஷன்களை போட்டுள்ளார்.

தமிழ் சினிமா உலகில் பிரபல நடிகரான அஜீத் நடிப்பில் கடைசியாக வெளியான படம் வலிமை. இந்தப் திரைப்படத்திற்குப் பிறகு அஜித், போனி கபூர், வினோத் கூட்டணி 61 படத்தில் இணைய  உள்ள இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ள நிலையில் அஜித்தின் அடுத்த திரைப்படம் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. அஜித் 62வது படத்தை விக்னேஷ் சிவன் இயக்க லைகா நிறுவனம் தயாரிக்கின்றது. இந்தப் படப்பிடிப்பு இந்த வருடம் இறுதியில் தொடங்குகின்ற நிலையில் இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்கின்றார்.

இந்த படத்திற்காக அஜீத், விக்னேஷ் சிவனிடன் சில கண்டிஷன்களை போட்டிருக்கிறாராம். அது என்னவென்றால் படத்தில் அரசியல் சார்ந்த வசனங்கள் இருக்கக் கூடாதாம். ஏனெனில் அண்மையில் வெளியாகிக் கொண்டிருக்கும் திரைப்படங்களில் அரசியல் வசனங்கள் இருந்து சர்ச்சைக்குள்ளாவதால் அது இருக்கக்கூடாது என முடிவெடுத்து இருக்கிறார். மேலும் படத்தில் ஃபேமிலி செண்டிமெண்ட் சீன்கள் இருக்க வேண்டுமாம். அப்போதுதான் குடும்பத்தோடு மக்கள் படத்தை பார்ப்பார்கள் என கூறியதாக செய்தி வெளியாகி இருக்கின்றது.

Categories

Tech |