Categories
சினிமா தமிழ் சினிமா

“ஏங்க அவரு சரியா தான் எழுதி இருக்காரு” சுத்தமான தமிழ் கூட புரியாதா….? பிரபல இயக்குனருக்கு ஆதரவு தெரிவித்து விஜே அஞ்சனா டுவீட்….!!!!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் நீயா நானா நிகழ்ச்சியின் போது கணவரின் அறியாமையை மனைவி கேலி செய்வார். அப்போது கோபிநாத் கணவருக்காக மனைவியிடம் பரிந்து பேசி அப்பா மகள் பாசத்தை அழகாக கூறுவார். இது தொடர்பான வீடியோக்கள் தற்போது இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது. இதற்கு சமூக வலைதளங்களில் பலரும் தங்களுடைய கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் இயக்குனர் விக்னேஷ் சிவன் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டு இருப்பார். அதில் மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு மட்டுமே தெரியும். முத்தம் காமத்தில் சேர்ந்ததன்று என்று பதிவிட்டு இருப்பார்.

இதில் சேர்ந்ததன்று என்ற வார்த்தையை நெட்டிசன்கள் தவறாக புரிந்து கொண்டுள்ளனர். இதன் காரணமாக ஒரு பதிவை வெளியிடுவதற்கு முன்பு நன்கு படித்துவிட்டு பதிவு செய்யுங்கள் என்று கமெண்ட் செய்து வருகின்றனர். இந்நிலையில் விஜே அஞ்சனா இயக்குனர் விக்னேஷ் சிவனுக்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக தன்னுடைய twitter பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில் சேர்ந்ததென்று என்று எழுதவில்லை. சேர்ந்ததன்று என்று சரியாகத்தான் எழுதி இருக்கார். சேர்ந்தது+அன்று என்பது பொருள் சேர்ந்தது கிடையாது. சுத்தமான தமிழ். இது புரியாம எவ்வளவு கமெண்ட்ஸ் என்று பதிவிட்டுள்ளார்.

Categories

Tech |