திருப்பூர் அருகே மூன்று மாத கர்ப்பிணி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பெருமாநல்லூரில் போயர் காலனியில் மணிஸ்வரன்(22) ஹேமலதா (22) தம்பதியினர் வசித்து வருகின்றனர். ஹேமலதா 3 மாதம் கர்ப்பமாக உள்ளார். அவர் 3 வருடத்திற்கு முன்பே செந்தில் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார் .அவர்கள் இருவருக்கும் (2) வயதில் பெண் குழந்தை உள்ளது. இவர்கள் இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்துவிட்டனர். இதனால் ஹேமலதாமீண்டும் மணிஸ்வரன் என்பவரை இரண்டாவது திருமணம் செய்து கொண்டுள்ளார்.
இந்நிலையில் மணிஸ்வரன் வேலைக்கு செல்லும்போது தனக்கு வயிறு வலிப்பதாக ஹேமலதா கூறியுள்ளார். அதன்பின் வேலையை முடித்து விட்டு அவர் வீடு திரும்பி உள்ளார். அப்பொழுது வீட்டிற்குள் ஹேமலதா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனைப் பார்த்த மணிஸ்வரன் அதிர்ச்சியடைந்தார். இந்த தகவலறிந்து சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து வந்து உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறார்கள்.