Categories
மாநில செய்திகள்

ஏசியில் திடீரென ஏற்பட்ட மின்கசிவு…. 2 வயது குழந்தை உயிரிழந்த சோகம்….!!!!

ஏசியில் ஏற்பட்ட மின் கசிவின் காரணமாக இரண்டு வயது குழந்தை உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.  

சென்னை பல்லாவரம் அடுத்த கவுல் பஜார் யசோதரை என்னும் நகரை சேர்ந்தவர் சங்கீதா (25). இவர் நேற்று தனது வீட்டின் வாசலில் அமர்ந்து பூக்கட்டி கொண்டிருந்திருக்கிறார். அப்போது அவரது 2 வயது குழந்தை பிரிஜிதா  படுக்கை அறையில் தூங்கிக் கொண்டிருந்தபோது திடீரென வீட்டினுள் தீப்பிடித்துள்ளது. இதனை பார்த்த சங்கீதா உள்ளே சென்று குழந்தையை தூக்க முயற்சி செய்தபோது தீ மளமளவென பரவியது குழந்தையை மீட்க முடியவில்லை.

பின்னர் தீயணைப்பு துறையினரை வர வைத்து தீயை அணைத்து குழந்தையை பார்த்த போது கட்டிலோடு குழந்தை முற்றிலுமாக எரிந்த நிலையில்  உள்ளார். தகவலறிந்த சங்கர் நகர் போலீசார் உடனடியாக குழந்தையின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில் முதற்கட்ட விசாரணையில் ஏசியில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக தீயணைப்பு துறையினர் தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |