தமிழக அரசு போக்குவரத்து கழகத்தில் 700 ஏசி பேருந்துகள் சேவை விரைவில் தொடங்கும் என தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதிலும் குறிப்பாக போக்குவரத்து சேவை முற்றிலும் முடக்கப்பட்டது. அதனால் மக்கள் அனைவரும் வீட்டை விட்டு வெளியேறாமல் வீட்டிலேயே முடங்கி கிடந்தனர். அப்போது மக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டது. அதன்பிறகு கொரோனா பாதிப்பு குறைந்து வரும் நிலையில் ஊரடங்கு தளர்வுகளை தமிழக அரசு அறிவித்து வருகிறது.
அதன்படி போக்குவரத்து சேவை தொடங்கியுள்ளது. இருந்தாலும் குறிப்பிட்ட அளவிலான பேருந்துகள் மட்டுமே இயங்கிக் கொண்டிருக்கின்றன. இந்நிலையில் கொரோனா ஊரடங்கு போது நிறுத்தப்பட்டிருந்த தமிழக அரசு போக்குவரத்து கழகத்தின் 700ஏசி பேருந்துகள் சேவை விரைவில் தொடங்கும் என அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
மார்ச் மாதத்திற்கு பிறகு வெயில் காலம் தொடங்கும் என்பதால் ஏசி பேருந்துகளின் சேவையை விரைவில் தொடங்குவதற்கான பணிகளை மேற்கொண்டு வருகிறோம். அதன்படி அரசு விரைவு போக்குவரத்து கழகத்தில் 354, விழுப்புரம் 92, கும்பகோணம் 50 உட்பட மொத்தம் 700 பேருந்துகள் சேவை விரைவில் தொடங்கும் என அவர் கூறியுள்ளார்.