Categories
சென்னை மாவட்ட செய்திகள்

ஏசி வெடித்ததில் புது மாப்பிள்ளை உடல் கருகி பலி…. கதறும் மனைவி…. சென்னையில் பெரும் சோகம்….!!!!

ஏசி வெடித்ததில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை மாவட்டத்தில் உள்ள கொளத்தூர் பகுதியில் ஷியாம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஆவின் விற்பனை பிரதிநிதியாக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு கடந்த 6 மாதங்களுக்கு முன்பாக தனலட்சுமி என்ற பெண்ணுடன் திருமணம் நடந்தது. இந்நிலையில் ஷ்யாம் தன்னுடைய வீட்டின் பெட்ரூமில் படுத்து தூங்கிக் கொண்டிருந்தபோது திடீரென ஏசி வெடித்துள்ளது. இந்த சத்தத்தை கேட்டு அதிர்ச்சி அடைந்த ஷாமின் பெற்றோர் அறைக்குள் வந்து பார்த்த போது அறை முழுவதும் தீப்பற்றி எரிந்தது.

இது தொடர்பாக தி.ரு.வி.க நகர் காவல்துறையினர் மற்றும் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்புத் துறையினர் மற்றும் காவல்துறையினர் உடனடியாக ஷியாமை மீட்க முயற்சி செய்தனர். ஆனால் அதற்குள் ஷியாம் உடல் முழுவதும் தீ பற்றி எரிந்து அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வரும் காவல்துறையினர் உயர் மின்னழுத்தம் காரணமாக ஏசி வெடித்திருக்கலாம் என்று கூறியுள்ளனர்.

Categories

Tech |